SPB Death: சிகிச்சை பலனின்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம்
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சற்று முன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. SPB Death: சிகிச்சை பலனின்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம் கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் விரைவில் வீடு திரும்பிவிடுவேன் என அவரே மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் அதன் பிறகு அவரின் நிலைமை மோசமாகி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். கவலைக்கிடமாக இருந்த அவருக்காக இசை ரசிகர்கள், பிரபலங்கள் என்று பலரும் பிரார்த்தனை செய்தார்கள்.