அதிரையில் இனி வண்டி மணலை வாங்க மாட்டோம் - பில்டர்ஸ் அசோசியேஷன் அதிரடி அறிவிப்பு
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், " உண்ண உணவும் உடுக்க உடையும் கிடைக்க பெற்ற ஒவ்வொரு மனிதருக்கும் நமக்காக ஒரு வீடு கட்டிக்கொள்ள வேண்டும். அல்லது இருக்கும் வீட்டை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இயல்பானது. 1. பணமதிப்புக் இழப்பு, 2.கஜா புயல் 3.கொரோனா நோய் தொற்று ஆகிய மூன்று விபத்துக்களைக் கடந்த நான்கு ஆண்டுகளில் சந்தித்து, விலைவாசி ஏற்றத்தால் பொருளாதார முடக்கத்தில் வேலைவாய்ப்பு இல்லாமையால் ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோருமே மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். விலைவாசி ஏற்றம் எல்லா பொருள்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் கட்டிடம் கட்டத் தேவையான ஒரு வண்டி மணல் கடந்த ஆண்டு 600 ரூபாய்க்கு விற்றது. இன்று ரூபாய் 2500 வரையில் உயர்ந்திருக்கிறது. சிமெண்ட் விலை மூட்டைக்கு 40 ரூபாய் கூடி இருக்கிறது. இந்த சூழலில் 600 ரூபாய் விற்ற மண் வண்டி ரூபாய் 1000-1100 வரை உயர்த்தி 4 மாதத்திற்கு முன் விற்கப்பட்டது. ஆனால் அதை இப்போது ரூ.2500 வரை ஏற்றம் செய்து விற்று வருகிறார்கள். மணல் வண்டிகாரர்கள் அரசின் புதிய நிபந்தனைகளின்படி வண்டி மணல் ஒரு நடைக்கு ரூ.105 மட்டுமே...
Comments
Post a Comment