அதிராம்பட்டினத்தில் தாஜுல் இஸ்லாம் சங்கத் துணைத்தலைவர் ஹாஜி MMS முகமது இக்பால் (62) வஃபாத்!

அதிராம்பட்டினம், மேலத்தெரு MMS குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் MMS சேக்தாவூது மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் MMS சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி MMS அப்துல் ஜப்பார்,  ஹாஜி MMS தாஜூதீன், மர்ஹூம் MMS அன்சாரி, MMS சபீர் அகமது ஆகியோரின் சகோதரரும், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத் துணைத் தலைவருமாகிய ஹாஜி MMS முகமது இக்பால் (வயது 62) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (25-09-2020) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Comments

Popular posts from this blog

SPB Death: சிகிச்சை பலனின்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம்

குப்பைகள் CMP Lane இல் சிதறிக்கிடக்கும் அவளம்!

அதிரையில் இனி வண்டி மணலை வாங்க மாட்டோம் - பில்டர்ஸ் அசோசியேஷன் அதிரடி அறிவிப்பு