தஞ்சை வினோதகன் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு அனுமதி: ஆட்சியர் தகவல்!

தஞ்சை வினோதகன் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு அனுமதி: ஆட்சியர் தகவல்!

அதிரை நியூஸ்: செப்.20
தஞ்சாவூர் வினோதகன் மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சை அளித்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் வினோதகன் மருத்துவமனையில் 35 படுக்கை வசதிகள் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 15 படுக்கை வசதிகள் பிராணவாயு கருவியுடனும், 5 படுக்கை வசதிகள் வென்டிலேட்டர் கருவியுடனும், 15 படுக்கை வசதிகள் அறிகுறி இல்லாமல் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சை பெறுபவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சை அளிக்க முன்வரும் தனியார் மருத்துவமனைகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று சிகிச்சை அளிக்கலாம்.

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளர்களுக்கு 50 பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா நோய்த்தொற்று குறித்து வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளும் போது, சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. அவ்வாறு பரிசோதனை செய்யப்படும்போது, பிராணவாயு அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டால், தொடர்புடைய நபர்களுக்கு ஸ்வாப் பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலர்களும் பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியை பயன்படுத்தி தங்களின் பிராணவாயு அளவு குறித்து தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தங்களின் அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அதிரையில் இனி வண்டி மணலை வாங்க மாட்டோம் - பில்டர்ஸ் அசோசியேஷன் அதிரடி அறிவிப்பு

SPB Death: சிகிச்சை பலனின்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம்

குப்பைகள் CMP Lane இல் சிதறிக்கிடக்கும் அவளம்!