தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 45 லட்சம் மதிப்பீட்டில் திரவ பிராண வாயு மையம்!

செப்.20
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் மற்றும் தயார் நிலை  குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (20.09.2020) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்கு தேவையான கூடுதல் திரவ பிராண வாயு மையம் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதையும், 10 கிலோ லிட்டர் டேங்க் அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார். 

தொடர்ந்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைப் பிரிவில் கூடுதல் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.

மேலும், பார்வையாளர்கள் காத்திருப்பு அரங்கில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அங்கு இரண்டு கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு, கூடுதல் கழிப்பறைகளை ஏற்படுத்திட அறிவுறுத்தினார்.

இவ்வாய்வின் போது, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். மருதுதுரை, நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வம் மற்றும் மருத்துவக்கல்லூரி துணைக் கண்காணிப்பாளர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

Comments

Post a Comment

Popular posts from this blog

அதிரையில் இனி வண்டி மணலை வாங்க மாட்டோம் - பில்டர்ஸ் அசோசியேஷன் அதிரடி அறிவிப்பு

SPB Death: சிகிச்சை பலனின்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம்

குப்பைகள் CMP Lane இல் சிதறிக்கிடக்கும் அவளம்!