அதிரையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அதிராம்பட்டினம், செப்.19
சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகள் சார்பில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவராணம் வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் கொள்கை, மின்சார திருத்தச்சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய சட்டங்களையும், கொள்கைகளையும் கைவிட வேண்டும், கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும், பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் (பொ) என்.காளிதாஸ் தலைமை வகித்தார். இதில், ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏ.எச் பசீர் அகமது, இ.முகமது பாருக், எம்.சுப்பிரமணியம், எஸ். மீரா சாகிப், எம்.முகமது இக்பால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Comments
Post a Comment